ஃப்ரைடு பன்னீர் மசாலா – ரெஹைனா

ஃப்ரைடு பனீர் மசாலா
ஃப்ரைடு பனீர் மசாலா

சமையல் குறிப்பு: ரெஹைனா

தேவையான _ பொருட்கள்
பனீர்-200gm
சிறய வெங்காயம் – 200gm
தக்காளி – 2
மிளகாய் வற்றல் – 5
பூண்டு – ஒரு முழு பூண்டு
தே. எண்ணெய் – 50mட
மிளகு சீரகதூள் – 1/2 ஸ்பூன்.
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
மிளகு.சீரகம். சோம்பு தூள் – 1 1/2 ஸ்பூன் (இது எல்லாம் கலந்த எங்கள் வீட்டு மசாலா பொடியை நான் உபயோகித்தேன். தனித்தனியாக இருப்பின் ,, தலா 1 /2 ஸ்பூன் போடவும்)
மல்லி தழை – தேவைக்கு
உப்பு – தேவைக்கு

செய்முறை
1 -பனீருடன் மிளகு சீரகதூள் உப்பு கலந்து 10 நிமிடம்
ஊற வைத்து,, தோசைதவாவில் சிறிது எண்ணெய் தடவி ,, எண்ணெய் நன்கு காய்ந்ததும் ,, பனீரை நன்கு பொரித்தெடுக்கவும்….
2 -வெங்காயம்.மிளகாய் வற்றல்., தக்காளி .ஆகியவற்றை, சிறிதளவு நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்
வெந்தவுடன் நீரை விட்டு அவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்யவும் (வேக வைத்த நீரை கொட்டி விட வேண்டாம் அதை இதே சமையலில் பயன் படுத்திக் கொள்ளலாம)
3_பூண்டை உரித்து ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்
4 – அடுப்பில் ஒரு ஃப்ரைபேன் வைத்து தே. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ., தட்டிய பூண்டை போட்டு நன்கு
வதக்கி,,, அரைத்த பேஸ்டை போடவும் .,அதனுடன் கரம் மசாலா, வீட்டு மசாலா பொடி போட்டு நன்கு வதக்கவும் தேவைக்கு உப்பு சேர்த்து வெங்காயம் வேக வைத்த நீர் இருக்கிறால்லவா? அதை உற்றி நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் .பிரிந்து வரும் நிலை வரும் போது பொரித்த பனீரை போட்டு ஒரு 3 நிமிடம் கிளறி.,, மல்லி தழை தூவி இறக்கி விடவும்,,,, சுவை அள்ளும் நண்பர்களே….
(குறிப்பு)
பனீரை ஓவர் குக் பண்ண வேண்டாம். கடினமாகி விடும்
வெங்காயம்.தக் , மி வ.வேக வைக்க சிறிதளவு நீரே பயன்படுத்த வேண்டும் …

Follow us on Social Media