அரைச்ச மசாலா மீன் ரோஸ்ட் – திருப்பூர் கணேஷ்

பேலியோ – மீன், அசைவம்

தேவையான பொருட்கள்:

1. மீன் – 1 கிலோ, எதாவது ஒன்னு உங்களுக்கு பிடித்த (நான் ஊளி மீன்ல செஞ்சேன்)
2. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – தேவையான அளவு.

3 .சின்ன வெங்காயம் – 10
4. மிளகு – 2 தேக்கரண்டி
5. சீரகம் – 1 தேக்கரண்டி
6. சோம்பு – 1 தேக்கரண்டி
7. பசு மஞ்சள் – 1 1/2 இன்ச்
8. இஞ்சி – 2 இன்ச்
9. பூண்டு – 10 பல்
10. எலுமிச்சை – 1 (பிழிந்து ஊற்றனும் 🙂 )
11. முட்டை – 1 வெள்ளைக்கரு மட்டும்
12. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
13. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை – 2 கொத்து
15. கொத்தமல்லி தழை – 5 தண்டு
16. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
17. உப்பு – தேவையான அளவு

3 முதல் 17 வரை உள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து அல்லது அம்மியில் (தண்ணி விடாமல்) நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

மீன் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒருமுறை அ இருமுறை கழுவி ட்ரை ஆக்கி ஒரு பெரிய ப்ளேட்டில் வைக்கவும்.

அரைச்ச மசாலாவை மீன் துண்டுகளின் மீது எல்லா பக்கமும் நன்றாக தடவி அதனை அப்படியே ஒன்று அ இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் அ நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 3 அ 4 மீன் (கல் சைஸ் பொறுத்து) துண்டுகளை வைத்து தீயை மிதமாக எரிய விடவும். 5 நிமிடத்திற்கு ஒருமுறை அவற்றை மிக மெதுவாக உடையாமல் அப்படியே புரட்டிப் போடவும். இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் மீன் ரோஸ்ட்டை எடுத்து விடவும்.

பின் மீன் ரோஸ்ட் மீது எலுமிச்சை சாறு பிழிந்து பெரிய வெங்காயம் வெட்டி வைத்து பறிமாறவும்.

இப்போ சூடான சுவையான மனமான அரைச்ச மசாலா மீன் ரோஸ்ட் தயார். உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பா என்னா டேஸ்ட்டு……. முடியல…….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media