அரைத்த மீன் தலை திப்பிலி சூப் – ராதிகா ஆனந்தன்

அரைத்த மீன் தலை திப்பிலி சூப் ( தம் குக்கிங் / ஸ்லோ
குக்கிங்கின் மாற்றுமுறை)

மீன் தலை ஒரு கிலோ , 6 லிட்டர் தண்ணீர் , குக்கரில் எடுத்துக்கொள்ளவும். ஒரு பெரிய இஞ்சி துண்டு, 8 பல் பூண்டு, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி சோம்பு , 1 பட்டை, 1 கிராம்பு, 1 ஏலக்காய், 2- 3 திப்பிலி, 10 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பெரிய துண்டு பசுமஞ்சள், 1 ஸ்பூன் மிளகு, 1 பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து ரசத்துக்கு இடிப்பதுப் போல் இடித்துக்கொள்ளவும். மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் ஒன்றரை தேக்கரண்டி, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு , ஒரு பெரிய எலுமிச்சை ஜூஸ் , கறிவேப்பிலை சேர்த்து குக்கரை வாழை இலை வைத்து இன்னொரு மூடியால் மூடி, ஒரு பெரிய சட்டியில் தண்ணீர் ஊற்றி மிகவும் குறைவான தீயில் அதில் இந்த குக்கரை இறக்கி 6 முதல் 7 மணி நேரம் வரை வேகவிடவும். குக்கரில் காற்றுப் போகாமல் நன்கு இறுக்கமாக மூடி இருப்பது அவசியம். மூடி மேல் கனமான பாத்திரம் அல்லது வெந்நீர் நிரம்பிய பாத்திரம்வைத்துக் கொள்வது சிறப்பு. கீழ் சட்டியில் தண்ணீர் குறையாமல் பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் அவ்வப்போது தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். 6 மணி நேரம் கழித்து மீன் தலைகளை பத்திரப்படுத்தி கூழ் போல் அரைத்து சூப்பில் கலக்கவும் . நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஸ்லோ குக்கர் இல்லாதவர்கள் இவ்வாறு சூப் சமைத்து சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media