அவகேடோ ஸ்மூத்தி – ராணி விஜயன்

நேரம் : பத்து   நிமிடங்கள் (சுமாராக)

தேவையான பொருள்கள் :

 1. பால் – 100 ml
 2. உப்பு – பெரியவர்களுக்கு
 3. நாட்டு சர்க்கரை – குழந்தைகளுக்கு
 4. வெண்ணெய் பழம் – 1

செய்முறை:

 1. குறுக்கு வாட்டிலோ அல்லது நெடுக்கு வாட்டிலோ அவகாடோ பழத்தை அழகாக வெட்டவும்.
 2. விதை பெரிதாக இருக்கும்.
 3. அதை எடுத்து விட்டு, ஒரு ஸ்பூனால் ஸ்கூப் செய்தால் பழம் அழகாக வந்து விடும். (வீடியோ பார்க்கவும்)
 4. மிக்சி ஜாரில் போட்டு ஸ்பூனால் லேசாக வெட்டி விடவும்.
 5. பால் தேவையான அளவு ஊற்றவும்.
 6. நன்றாக ஸ்மூதி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
 7. இரண்டு கோப்பைக்கு மாற்றவும்.
 8. ஒரு கோப்பையில் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை போட்டு கலந்து விடவும்.
 9. ஒரு கோப்பையில் ¼ ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

 

குழந்தைகளுக்கும், உங்களுக்கும் சுவையான அவகேடோ ஸ்மூதி தயார்.

 

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=vZ0pcyX9TU8

 சமையல் குறிப்பு:

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Follow us on Social Media