அவகோடா மசியல் – உமா தாரணி

இதில் சாலட், மில்க் ஷேக் எல்லாம் சாப்டாச்சு, நல்ல காரமா இலேசான புளிப்புடன் மசியல் நன்றாகவே இருக்கிறது. இப்போது சீசன் கிலோ 140.

செய்முறை.

தே.பொருட்கள்

அவகோடா நன்கு பழுத்தது-2

கடுகு, பெ.காயம் சீரகம், – சிறிதளவு

தே.காய் – 2 டேபிள் ஸ்பூன்

ப.மிளகாய் – காரத்திற்கேற்ப

கொ.மல்லி, க.வேபிலை, இஞ்சி சிறிதளவு

தே.எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தே.அளவு

செய்முறை.

அவகோடாவை தோலுரித்து கொட்டை தவிர்த்து மற்றவற்றை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தே.காய், இஞ்சி, க.வேபிலை, கொ.மல்லி, ப.மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

கடாயில் தே. எண்ணெய் ஊற்றி கடுகு, பெ.காயம், தாளித்து, அவகோடா சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் போதும்
ம.பொடி சேர்க்கவும்.

அதில் அரைத்த விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன், தேவையான உப்பைச் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு எ.சாறு அரை மூடி சேர்க்கலாம்.

எளிமையா பத்தே நிமிஷத்துல செஞ்சுடலாம் 2 பேர் தாராளமா சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media