அவித்த சிக்கன் – ஆசியா உமர்

தேவையான பொருட்கள்;-
சிக்கன் — 1 கிலோ
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
சிக்கன் டிக்கா மசாலா – 2 டேபிள்ஸ்பூன் அல்லது விருப்பமான மசாலா.
பப்ரிக்கா பவுடர் இருந்தால் அரைடீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பு – தேவைக்கு.
( அவிக்கும் இந்த சிக்கன் ரெசிப்பிக்கு இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டாம்)

செய்முறை:-
சிக்கனை குவார்டர் பீஸாக கட் செய்து கொள்ளவும்.
சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும். தோல் எடுத்து விடவும். ஆனால் கொழுப்பெல்லாம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
சிக்கனுடன் தயிர், உப்பு, டிக்கா மசாலா அல்லது பிடித்த மசாலா ,பப்ரிக்கா பவுடர் சேர்த்து விரவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு இட்லி சட்டியில் அல்லது ஸ்டீமரில் வைத்து அவித்து எடுக்கவும்.
குறைந்தது அரைமணி நேரம் ஆகும்.
சூடான ஆரோக்கியமான சிக்கன் தயார்.
திறந்து உடனே பரிமாற வேண்டியது தான்.

இதற்கு ரெட் கேப்சிகம் டிப் தொட்டுக்க அருமையாக இருக்கும்..
ரெட் கேப்சிகம் -2 , 2 பல்லு பூண்டு,சுவைக்கு லைம் ஜூஸ்,உப்பு சேர்த்து அரைக்க வேண்டியது தான்.இத்துடன் ஆலிவ் ஆயில் 1 -2 டீஸ்பூன் கலந்து வைக்கவும். விரும்பினால் ஒரே ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

Follow us on Social Media