ஆட்டுக்கால் சூப் அல்லது ப்ராத் – சவடன் பாலசுந்நதரம்

ஆட்டுக்கால் சூப்

சமையல் குறிப்பு: சவடன் பாலசுந்நதரம்

தேவையான பொருட்கள்
—————————————–
ஆட்டு கால் – 4 (நெருப்பில் வாட்டி, ரோமம் நீக்கியது)
வெங்காயம் – பெரியது ஒன்று
தக்காளி – ஒன்று
மிளகாய் தூள் – 1 கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 கரண்டி
மட்டன் கரம் மசாலா – 1/2 கரண்டி
வீட்டில் செய்த சாம்பார் பொடி – 1/4 கரண்டி
மிளகுப் போடி – 3 கரண்டி
பட்டை, இலவங்கம், ஏலக்காய்- சிறிதளவு
தேவையான அளவு உப்பு
வினிகர் – விரும்பினால் சேர்க்கவும்..நான் போடவில்லை.

செய்முறை
—————–
ஆட்டுக்காலை சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து நீரில் 30 நிமிடம் ஊற வைத்து நன்கு 2/3 முறை சுத்தம் செய்யவும்.

பின்னர் ஸ்லோ குக்கரில் ஆட்டுக்காலைத் தவிர மீதி எல்லாவற்றையும் போட்டு தேவையான அளவு நீரைச் சேர்க்கவும்.

பின்னர் சிறியதாக வெட்டப்பட்ட ஆட்டுக் கால் துண்டுகளை சேர்க்கவும்….

முதலில் High mode ல் 4 மணி நேரம் வைக்கவும். பின்னர் Low mode க்கு மாற்றவும். இந்த mode ல் அடுத்த 24 லிருந்து 30 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை நன்றாக கிண்டி விடவும்.

ஆட்டுக் கால் எலும்புகள் மிருதுவாகி கரையும் வரை Low mode ல் வைக்கலாம். எனது ஆர்வம் மிகுதியால் நான் 24 மணி நேரத்திலேயே குக்கரை அணைத்துவிட்டு சூப்பை சுவைத்து விட்டேன்.

ஆஹா…..என்ன சுவை ….. அமிர்தம்…..சங்கர் ஜி சொன்னது போல் “மார்க்கண்டேயன் சூப்” தான்….

இதை இன்னும் எங்கனம் சுவை கூட்டலாம் என்பதை பின்னூட்டத்தில் இடுங்கள்….

தினமும் பேகன் சமைக்கும் காணொளிகளை முக நூலிலிட்டு எங்களைப் போன்றவர்களை சமைக்கத் தூண்டிய எங்களின் குரு/ ஆசான் Neander Selvan ஜி, ஸ்லோ குக்கர் வாங்க அறிவுரை வழங்கி , சமைக்க ஊக்கம் கொடுத்த Shankar Ji, இப்போதெல்லாம் தினமும் பன்னீரை வித விதமாய் சமைத்து என்னைப் போன்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கும், வாணி ராணி தொடரின் வசனகர்த்தா Pa Raghavan ஜி அவர்களுக்கும் நன்றி…..

நாங்களும் வந்துட்டோம்……இனி சமைப்போம் / குழுவில் ரெசிபி போடுவோம்….

Follow us on Social Media