ஆட்டுக்கால் பாயா – ராணி விஜயன்

நேரம் : இரண்டு  மணி நேரம் (சுமாராக)

வ.எண் பொருள் அளவு புரதம் கார்ப் கொழுப்பு நார் கலோரி
1 ஆட்டுக்கால் சூப் (1 கோப்பை) 350 ml 26 GM 17 GM 45 GM 7 GM 585

 

தேவையான பொருள்கள் :

 1. ஆட்டுக்கால் – 4 no (ஒரு ஆட்டுக்காலாக இருந்தால் மிக நல்லது).

(சோடா உப்பு, மஞ்சள் தூள், உப்பு போட்டு பத்து நிமிடம் மேரினேட் செய்து, புதிய பிரஷ் அல்லது தேய்ப்பான் வைத்து  நன்றாக கழுவி வைக்கவும்)

 1. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
 2. கறிவேப்பிலை – கொஞ்சம்
 3. கொத்துமல்லி தழை – கொஞ்சம்
 4. பெரிய வெங்காயம் – 100 கிராம்
 5. தக்காளி – 100 கிராம்
 6. கடுகு – கொஞ்சம்
 7. வடகம் – கொஞ்சம்
 8. ஆப்பிள் சிடர் வினிகர்- 2 ஸ்பூன்
 9. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

வறுத்து அரைக்க :

 1. மல்லி – 1 ½ ஸ்பூன்
 2. மிளகு – 1 ஸ்பூன்
 3. சீரகம் – 1 ஸ்பூன்
 4. கிராம்பு – 4
 5. பட்டை – 2 (சிறியதாக)
 6. காய்ந்த மிளகாய் – 3
 7. கசகசா – ½ ஸ்பூன்

மசாலா பொடிகள் :

 1. கரம் மசாலா – ½ ஸ்பூன்
 2. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
 3. மிளகாய் பொடி – ½ ஸ்பூன்
 4. கறி மசால் – ½ ஸ்பூன்
 5. உப்பு – தேவைக்கு ஏற்ப

 

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=SpRZKQ3lPGI

 

செய்முறை:

 1. முதலில் ஆட்டுக் கால்களை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
 2. வறுத்து அரைக்க வேண்டிய பொருள்களை வாணலியில் போட்டு சிறிது எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ளவும்.
 3. அடுப்பில் குக்கர் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும்.
 4. கடுகு, வடகம் போடவும்.
 5. கறிவேப்பிலை போடவும்.
 6. வெங்காயம் போடவும்.
 7. தக்காளி போடவும்.
 8. இஞ்சி பூண்டு விழுது போடவும்.
 9. மசாலா பொடிகள் போடவும்.
 10. உப்பு சிறிது போடவும்.
 11. இன்னொரு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொள்ளவும்.
 12. ஆட்டுக் கால்களை போடவும்.
 13. நன்கு கலந்து கொள்ளவும்.
 14. அரைத்து வைத்த மசாலா பொடிகளை போட்டு கலந்து விடவும்.
 15. இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரின் முக்கால் பாகம் வெந்நீர் சேர்க்கவும்.(அப்போது தான் சீக்கிரம் கொதி வரும்).
 16. கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
 17. ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்கவும். (அப்போது தான் எலும்பில் உள்ள சத்துக்கள் சூப்பில் இறங்கும்)
 18. குறைந்தது 20 – 25 வரை விசில் விடவும்.
 19. முடிந்ததும அடுப்பை அனைத்து குக்கரை சிறிது ஆற விடவும்.

img_6589

ஆட்டுக்கால் பாயா தயார்.

சூடாக பரிமாறவும். (நாங்கள்  இரண்டு நாள் வைத்திருந்து குடித்து முடித்தோம்)

 சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000349157027

 

Follow us on Social Media