ஆட்டுக்கால் பேலியோ சூப் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

ஆட்டுக்கால் : 1 செட்
வெங்காயம் : 1
தக்காளி : 2
இஞ்சி பூண்டு விழுது : 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 4
சோம்பு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை & கொத்தமல்லி : தேவைக்கு
உப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
வெண்ணெய் : 1 தேக்கரண்டி
தேங்காய் பால் : 2 கப்
மிளகு தூள் : தேவைக்கு

செய்முறை :

ஒரு குக்கரில் சுத்தம் செய்த ஆட்டுக் கால்களை போட்டு, மூழ்கும் வரைக்கும் அதிகமாக தண்ணீர் விட்டு இஞ்சி பூண்டு விழுது, உப்பு & மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு 15 முதல் 20 விசில் (1 மணி நேரம் ) வரை நன்றாக வேக விட வேண்டும். (அப்படி வேக விட்டால் எலும்புகளை கடித்து சுவைக்கலாம் )

ஒரு அகன்ற கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் , சோம்பு, பச்சை மிளகாய் & கறிவேப்பிலை தாளித்து , அத்துடன் நறுக்கிய வெங்காயம் & தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்க வேண்டும்.

பின் வேக வைத்த சூப் கலவையை சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து நன்றாக 5 கொதி விட வேண்டும்.
பின் தேங்காய் பால் , மிளகு தூள், வெண்ணெய் & கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடவும்.

சுவையான ஆட்டுக்கால் பேலியோ சூப் தயார் …

சமையல் குறிப்பு :

Follow us on Social Media