ஆட்டுக் குடல் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானப் பொருட்கள்

ஆட்டு குடல் : ஒரு ஆட்டு குடல்
தக்காளி : நான்கு
வெங்காயம் : மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் : மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் : இரண்டு
உப்பு : தே. அளவு

வறுத்து பொடிக்க தேவையானவை :

பட்டை : 2 சிறிய துண்டு
ஏலம் : 2
லவங்கம் : 4
மிளகு : 3 டேபுள் ஸ்பூன்
சீரகம் : 2 டேபூள் ஸ்பூன்
சோம்பு : அரை டேபுள் ஸ்பூன்

தேங்காய் எண்ணை : இரண்டு தேக்கரண்டி
கொத்து மல்லி : இரண்டு தேக்கரண்டி

செய்முறை :

குடலை நன்றாக மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் உப்பு போட்டு தண்ணீர் விட்டு குக்கரி பத்து நிமிடம் மிதமான தீயிலும், பதினைந்து நிமிடம் குறைந்த தீயிலும் வைத்து வேக விடவும். 5 விசில் வந்தவுடன் தீயை அணைத்து , ஆவி அடங்கியவுடன் குக்கரை திறக்க வேண்டும்.

மீண்டும் தீயில் வைத்து தண்ணீரை வற்றவிட வேண்டும்.
வற்றியவுடன் பெரிய இரும்பு கிடாயில் எண்ணை ஊற்றி வறுத்து பொடி செய்த பொடியை போட்டு இந்த குடலை போட்டு இரண்டு மூன்று முறை கிளறி மூடி போடவும்.

தொக்கு பதத்திற்கு வந்தவுடன் கொத்து மல்லி தூவி இறக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media