ஆட்டு இரத்தப் பொரியல் – சவடன் பாலசுந்தரம்

செய்முறை மிகவும் எளிது….

ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்கள் வாரம் ஒரு முறை இதை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்
——————————————
ஆட்டு இரத்தம் – 300 கிராம்.
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – துருவியது – சிறிதளவு
மிளகுப் போடி – தேவையான அளவு.
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய-3 டீஸ்பூன். .
உப்பு – தேவையான அளவு.

14716045_10211376596552625_6110806306272244983_n

செய்முறை
——————
இரத்தம் கடையில் வாங்கி வந்தவுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து , நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்.

அது கட்டியாக கேக் போன்று இருக்கும். எனவே கையால் உதிர்த்து விடவும். சிறிய துண்டுகளாக ஆகும் வரையில்.

அடுப்பைப் பற்ற வைத்து, வாணலியில் 3 டீஸ்பூன் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன் சிறிதாய் நறுக்கிய வெங்காயம் / பச்சை மிளகாய் / தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

14568068_10211376598192666_4536014100565813414_n

நன்கு வதங்கியவுடன் இரத்தத்தை கொட்டி கிளறவும்……சிகப்பு நிறம் பிரவுன் நிறமாக மாறும் போது மிளகு பவுடர் போட்டு மீண்டும் கிளறவும்……கடைசியாக துருவிய தேங்காயை மேலாக தூவி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்….(நான் தேங்காய் சேர்க்கவில்லை-கார்போஹைட்ரேட் கருதி)

சிறிதளவு கொத்தமல்லி இலைகளை மேலாக தூவினால், அருமையான , சுவையான இரத்தப் பொரியல் தயார்…..

சூடாக சாப்பிட்டால் நல்லது…

செய்து பாருங்கள்…..உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்….

Follow us on Social Media