ஆட்டு இரத்த பொரியல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

ஆட்டு இரத்தம் : 1 கப்
சின்ன வெங்காயம் : 100 கிராம்
பூண்டு : 30 பல்
பச்சை மிளகாய் : 5
இஞ்சி : 1 இன்ச் அளவு
தேங்காய் : அரை மூடி
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
கடுகு & சீரகம் : சிறிதளவு
கறிவேப்பிலை & உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

ஆட்டு இரத்தத்தை தண்ணீர் விட்டு கழுவி, ஒரு பாத்திரத்தில் வைத்தோ அல்லது துணியில் சுற்றியோ ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் ஆட்டு ஈரல் பதத்தில் மாறி விடும், அதனை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் & சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன், ஆவியில் வேக வைத்து உதிர்த்து வைத்த இரத்தத்தை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். பிறகு துறுவிய அரை மூடி தேங்காயை அதனுடன் சேர்த்து மேலும் 1 நிமிடம் வைத்து, கறிவேப்பிலை தூவி அலங்கரித்து இறக்கி விடவும்.

சுவையான ஆட்டு இரத்த பொரியல் தயார்.

சமையல் குறிப்பு :

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Follow us on Social Media