ஆட்டு நுரையீரல் தொக்கு – ராதிகா ஆனந்தன்

நுரையீரலை மஞ்சள் தூள் உப்பு
சேர்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு , சீரகம், சோம்பு, மிளகு தலா அரை ஸ்பூன், பட்டை 1, ஏலக்காய் 1, பச்சை மிளகாய் 1, தேங்காய் 2 சின்ன சில்லு, 4 சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ளவும். குக்கரில் கொழுப்பு அல்லது வெண்ணெய் ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் 10, தக்காளி 1, அரைத்த விழுது சேர்த்து வதக்கி ஆட்டு நுரையீரல், மிளகாய் தூள், மல்லித்தூள் தலா 1 ஸ்பூன், உப்பு , மஞ்சள் தூள் ,தண்ணீர் 1 கப் ஊற்றி 7 விசில் வைத்து இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் தொக்கு தயார்!

சமையல் குறிப்பு:

Follow us on Social Media