ஆட்டு நுரையீரல் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

நுரையீரல் : ஒரு ஆட்டினுடையது
வெங்காயம் : 1
தக்காளி : 2
இஞ்சி பூண்டு விழுது : 3 தேக்கரண்டி
தயிர் : 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 1
மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
மிளகு தூள் : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
தேங்காய் : அரை மூடி
உப்பு & கருவேப்பிலை தேவைக்கு .
தேங்காய் எண்ணெய் : 3 தேக்கரண்டி

செய்முறை :

சிறிது சிறிதாக வெட்டிய நுரையீரலை நன்றாக சுத்தம் , தயிர், மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , & உப்பு சேர்த்து கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பச்சை மிளகாய் & கறிவேப்பிலை தாளித்து , அதனுடன் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகிவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் அத்துடன் ஊற வைத்த நுரையீரலை சேர்க்கவும். மிதமான தீயில் அரை மணி நேரம் வேக வைக்கவும். பின் அரைத்த தேங்காய் சேர்க்கவும் .

நன்றாக வெந்து , தொக்கு பதத்திற்கு வந்தவுடன் , மிளகு & சீரக தூள்கள் சேர்த்து கலந்து இறக்கவும்.

சுவையான , மிருதுவான நுரையீரல் தொக்கு தயார் …

சமையல் குறிப்பு :

Follow us on Social Media