ஆட்டு மூளை மிளகு பிரட்டல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

மூளை : இரண்டு
மஞ்சள் தூள் : கால் தேகரண்டி
உப்பு : தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் : இரண்டு தேக்கரண்டி

(கீழ்காணும் பொருட்களை வெறும் கடாயில் வருத்து பொடியாக்கிகொள்ளவும்)

மிளகு – பத்து
சீரகம் : ஒரு தேக்கரண்டி
பட்டை : ஒரு இன்ச் துண்டு
கிராம்பு : இரண்டு
ஏலக்காய் : ஒன்று
சோம்பு : கால் தேக்கரண்டி
முழு தனியா : ஒருதேகரண்டி

தேங்காய்எண்ணை : இரண்டு தேகரண்டி
நெய் : ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி இலை : சிறிது

செய்முறை :

மூளயை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து விட்டு வெட்டாமல் கழுவி நீரை வடிகட்டவும்.

மூளையை மஞ்சள் தூள் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வேக வைக்கவும்.

ஒரு இரும்பு கடாயில் எண்ணை & நெய் ஊற்றி பொடித்த பொடி முழுவதும் போட்டு வேகவைத்த மூளையயும் போட்டு தண்ணீர் முழுவதும் சுண்ட விட்டு மிதமாக பிரட்டவும். உப்பு சரி பார்த்து கொள்ளவும்.

நல்ல முருவலாக வறுத்தெடுத்து, வெட்டி கொத்து மல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான ஆட்டு மூளை மிளகு பிரட்டல் தயார் ….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media