ஆந்திரா கத்தரிக்காய் வறுவல் – RTN. கண்ணன்

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் : 250 கிராம்
பச்சை மிளகாய் : 2
மிளகாய் தூள் : அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
கரம் மசாலா : சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது : இரண்டு தேக்கரண்டி
கடுகு, சீரகம் & உப்பு : தேவையான அளவு
எலுமிச்சை சாறு : இரண்டு தேக்கரண்டி
தேங்காய் எண்ணை : இரண்டு தேக்கரண்டி
20 பாதாம் (வறுத்து நொறுக்கியது)
கறிவேப்பிலை : ஒரு இணுக்கு
நெய் : ஒரு தேக்கரண்டி

செய்முறை :

கத்தரிக்காயை சிறிதாக நறுக்கி, உப்பு நீரில் போட்டு வைக்கவும்.

ஒரு இரும்பு கடாயில், தேங்காய் எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம் & கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக பச்சை வாசனை போக வதங்கியவுடன், நறுக்கிய கத்தரிகாய்களை சேர்க்கவும்.

நன்றாக கிளறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் & உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடிபோட்டு, மிதமான தீயில் வேக வைக்கவும்.

நன்றாக வெந்தவுடன், கரம் மசாலா, எலுமிச்சை சாறு & பாதாம் சேர்த்து பிரட்டி, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, பரிமாறவும்.

சுவையான ஆந்திரா கத்தரிக்காய் வறுவல் தயார்.

(குறிப்பு : நமது Neander Selvan ஜியின், பாதாம் சேர்ப்பது பற்றிய பதிவினை இப்போதுதான் படித்தேன். எனவே பாதாமிற்கு பதிலாக துருவிய தேங்காய் பயன்படுத்துங்கள்)

 

சமையல் குறிப்பு :

Follow us on Social Media