ஆந்திர மசாலா மீன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

மீன் (எந்த மீன் வேண்டுமானாலும் ) : 300 கிராம்
தேங்காய் எண்ணெய் : 1/2 கப்
கடுகு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
வெந்தயம் : 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை : தேவையான அளவு
தக்காளி : 1
மல்லி தூள் : 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் (நல்ல மணம் & நிறம் கொடுக்கும்) : 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
புளி : 1 சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து வைத்துக்கொள்ளவும்)
தண்ணீர் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொறிக்கவும்.

அதனுடன் நறுக்கிய பெருங்காயம் சேர்க்கவும். மேலும் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு நறுக்கி சுத்தம் செய்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

அதன் பின்னர் புளி தண்ணீரை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.

தொக்கு பதத்திற்கு வந்து , வெந்த பின் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media