ஆபத்தானவையா பண்ணைகோழிகள்? – நியாண்டர் செல்வன்

ஒரு ஆய்வுக்கட்டுரை

பண்ணைகோழிகள் பற்றிய உண்மைகளை அறியும் முயற்சியாக ஒரு தொடர் எழுதுவதாக அறிவித்திருந்தேன். அதன்படி பண்ணைகோழி உரிமையாளர்கள், வெடினரி டாக்டர்கள் ஆகியோருடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். குழு உறுப்பினர்கள் பலரும் இதில் மிக உதவினார்கள்.

இன்று அதன் ஒரு பகுதியாக நம் குழு உறுப்பினரும், நாமக்கல்லில் முட்டை வணிகம் பல ஆண்டுகளாக செய்து வருபவரும் முன்னாள் கோழிப்பண்ணை உரிமையாளருமான முத்தூர் சேகர் அவர்களுடன் உரையாடினேன்.

உரையாடியதில் பண்ணைகோழிகளுக்கு போடபடும் தடுப்பூசிகள் பற்றி கேட்டேன்.

பண்ணைகோழிகளுக்கு 10 வகை தடுப்பூசிகள் போடபடுவதாக கூறினார். இவை மனிதர்களுக்கு போடபடுவது போல வியாதிகளை தடுக்கும் நோக்கிலேயே போடபடுவதாக கூறினார். ஐ.பிடி போன்ற தொற்றுவியாதிகள் கோழிகளுக்கு பரவாமல் இருக்க இந்த வாக்சின்கள் போடபடுகின்றன என கூறினார். இவை போடாமல் இருந்தகாலகட்டத்தில் பறவைகாய்ச்சல் வியாதி வந்து நூற்றுக்கு 80% கோழிகள் வரை பல பண்ணைகளில் இறந்தன என்றும் இவை போடபட்டபின் இப்போது 90% வரை கோழிகள் வியாதிகள் இன்றி தப்புகின்றன எனகூறினார்

கோழிகளுக்கு அளிக்கபடும் உணவு பற்றிகேட்டேன்

மிகதிட்டமிட்ட முறையில், அறிவியல்பூர்வமாக கோழிகளுக்கு உணவு வழங்கபடுவதாக கூறினார். கோழிகளின் கலோரி தேவைகளுக்கு மக்காசோளம், கோதுமை மற்றும் அரிசி தவிடும், புரததேவைக்கு நிலக்கடலைகேக், சோயா கேக், கொழுப்புக்கு சன்பிளவர் ஆயில்கேக் ஆகியவையும் வழஙகபடுவதாகவும், கால்சியத்துக்கு சிப்பிகளின் ஓடுகளில் இருந்து எடுக்கபடும் பவுடர், வைட்டமின் மாத்திரை கலவைகள் ஆகியவை வழங்கபடுவதாகவும் கூறினார்.

மனிதர்கள் பலரின் உணவே இத்தகைய திட்டமிடலுக்கு உட்பட்டவை அல்ல என்பதை நாம் உணரவேண்டும். கோழிகளுக்கு இது மிக சத்தான உனவு. இயற்கையாக நிலத்தில் இருக்கும் புழுக்கள், பூச்சிகள், புற்களை உண்பது இதை விட நிச்சயமாக பெஸ்ட்தான். ஆனால் அது சாத்தியமில்லை எனும் பட்சத்தில் இந்த உணவு மிக திட்டமிட்ட, சரியான உணவாகும். இதை மேம்படுத்த தேங்காய் பவுடர், பிளாக்சீட் பவுடர் ஆகியவற்றை சேர்க்கலாம் தான். ஆனால் அது இறைச்சிவிலையை அதிகபடுத்தும்.

கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடபடுகிறதா என கேட்டதுக்கு அது நிச்சயமாக போடபடுவதில்லை என உறுதியாக கூறினார். நம் குழுவில் ஒரு வெடினரி டாக்டரும் இத்தகவலை முன்பே தெரிவித்திருந்தார். கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடபட்ட்டால் அவை இறந்துவிடும் என்றார் அந்த மருத்துவர்.

கோழிகளுக்கு க்ரோத் புரமோட்டர் எனும் வகை மருந்துகள் வழங்கபடுவதாக கூறினார். க்ரோத் புரமோட்டர் என்றால் என்ன என தேடினேன். அவை பென்சிலின் போன்ர சிலவகை ஆண்டிபயாடிக்குகள். கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கபடுவதால் மனிதருக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக, மிக அரிதே என ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் ஜீரணம் செய்யமுடியாத மருந்துகளே ஆண்டிபயாடிக்குகளாக பயன்படுத்தபடுகின்றன. அவை இறைச்சிமூலம் நம் உடலில் சேரும் வாய்ப்பு இல்லை. ஆனால் நீன்டநாள் நோக்கில் கோழிகளின் உடலில் உள்ள கிருமிகளை ஆன்டிபயாடிக்குகளுக்கு கட்டுபடாமல் இருக்கும் தன்மை கொண்டவையாக இந்த ஆண்டிபயாடிக்குகள் மாற்றிவிடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டிபயாடிக்குக்ள் தடைசெய்யபட்டுள்லன. ஆனால் கோழிகளை உண்பவ்ருக்கு இதனால் விரைவில் வயதுக்கு வருவது, கான்சர் வருவது எல்லாம் வரும் என்பது மிக தவறான தகவல். நான் விசாரித்தவரை இந்த ஒரு விஷயம் மட்டுமே பண்ணைகோழிகளில் மாற்றம் செய்யபடவேன்டிய விஷயம். ஆனால் இதில் கோழிகளை உண்பவருக்கு பாதிப்புகள் இல்லை. நீண்டநாள் நோக்கில் ரெசிஸ்டண்ட் பாக்டிரியா மூலம் ஆண்டிபயாடிக்குகளுக்கு கட்டுப்படாத வகை நோய்க்கிருமிகள் உருவாகி மனிதரை தாக்கலாம் எனும் சந்தேகம் மட்டும் உள்ளது. நம் அரசு இதை ஆராய்ந்து முறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

நாட்டுகோழிகள், ஏன் வாத்துக்களுக்கு கூட வாக்சின்களும், இவ்வகை உணவுமே வழங்கபடுவதாக நண்பர் கூறினார். ஆக நாட்டுகோழி என்பது ப்ரிரேஞ்ச் கோழி அல்ல. அப்படிபட்ட கோழி வேண்டுமெனில் கிராமங்களில் இயற்கையாக மேயும் கோழியை தேடிபிடித்தே வாங்கவேண்டும். கடைகளில் விற்கும் நாட்டுகோழி முட்டையும், பண்ணைகோழி முட்டைதான்

ஆக இன்றைய உரையாடல் முடிவில் நான் அறிந்த தகவல்கள் இவையே. அடுத்ததாக வெடினரி டாக்டர்களுடன் பேசி மேலதிக தகவல்களுடன் கட்டுரை தொடரை தொடர்கிறேன். அதனால் தைரியமாக பண்ணைகோழிகளை உண்னலாம் என்பதே தற்போதைய நிலையிலான பரிந்துரை….

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 6

Upvotes: 3

Upvotes percentage: 50.000000%

Downvotes: 3

Downvotes percentage: 50.000000%

Follow us on Social Media