ஆபத்தானவையா பண்னைகோழிகள்- பாகம் 3 – நியாண்டர் செல்வன்

Perfect is the enemy of good என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

ஸ்விட்சர்லாந்து ஊட்டியை விட நல்ல சுற்றுலாதளம் தான். ஆனால் அதற்காக ஊட்டிக்கு போகிறவர்களுக்கு மனமகிழ்ச்சி கிடைக்காது என எதுவும் இல்லை. அனைத்தும் நம்மிடம் இருக்கும் பணம், சூழலை பொறுத்ததே.

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபை நிலம் கட்ட இடமே கிடைக்காமல் தமிழக அரசு அவதிப்பட்டு ராணிமேரி கல்லூரியை எல்லாம் எடுக்க முன்வந்து, பிரச்சனை ஆனது. ஆக சென்னையில் அரசே நினைத்தாலும் இடம் கிடைக்காது என்கையில் நாட்டுகோழிகளை வாங்கி ப்ரி ரேஞ்ச் ஆக மேயவிட எங்கே இருக்கு இடம்? ஈரொட்டு, கோவை, திருப்பூர், நாமக்கல் எல்லாவற்றிலும் இதே நிலைதான். நிலம் விலை மிக அதிகம். ப்ரிரேஞ்ச் பண்ணை எல்லாம் வைத்து மெய்ன்டெய் செய்ய இன்று அம்பானி, டாடா, பிர்லா நினைத்தால் தான் முடியும்.

தரங்களின் மூன்றுவகை உண்டு

1) இயற்கையாக காட்டில் வேட்டையாடி பிடித்த மான், முயல் போன்றவை முதலிடம். இதற்கு ஒப்பான தரம் ப்ரிரேன்ச்ஜாக வலர்க்கபடும் மிருகங்களின் இரைச்சியில் உண்டு – இது ஸ்விட்சர்லாந்து

2) ஆர்கானிக். இது ப்ரிரேஞ்ச் அல்ல. ஆனால் நாம் வளர்க்கும் மிருகங்களுக்கு எந்த ஊசியும், மருந்தும் கொடுக்காபடுவதில்லை என்பதையே குறிக்கிறது. ஆர்கானிக் என்பது சில பொருட்களுக்கு ஓக்கே. பல பொருட்களுக்கு அது அவசியமில்லை – இது லடாக்

3) பண்ணையில் வளர்க்கபடும் மிருகங்கள்- இது ஊட்டி

உங்களிடம் காசும், வசதியும் இருக்கிறதா? ஸ்விட்சர்லாந்தோ, லடாக்கோ போய்வாருங்கள். அது குறைவாக இருக்கிறதா? ஊட்டிக்கு சுற்றுலா போய்வாருங்கள். அவ்வளவுதான் மேட்டர்.

கோழி இறைச்சியில் இருவகை பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிடபட்டு பயமுறுத்துகிறார்கள்

1) க்ரோத் ஹார்மோன் கொடுப்பது

உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் சென்று “க்ரோத் ஹார்மோனை எடுத்துக்கொன்டால் நான் அர்னால்டு மாதிரி வளர்வேனா” என கேட்கவும். சிரிப்பார். உண்மை என்னவென்றால் நாமறிந்த க்ரோத் கார்மோனிலேயே மிக சிறந்தது எது என்றால் இன்சுலின் தான். சர்வதேச அரங்குகளில் பட்டம் பெறும் அனைத்து பாடிபில்டர்களும் இன்சுலினை எடுத்துக்கொண்டே அத்தனை பெரிய வளர்ச்சியை அடைகிறார்கள். இன்சுலினை தடை செய்தால் மிஸ்டர் ஒலிம்பியாக்களின் உடல் எடை சரிபாதிக்கும் மேலாக குறைந்துவிடலாம். ஆனால் அதே இன்சுலினை ஊசிமூலம் செலுத்தும் சர்க்கரை நோயாளிகள் ஏன் அர்னால்டு மாதிரி உடல்வலு பெறுவதில்லை?

ஏனெனில் க்ரோத் ஹார்மோன் மற்றும் இன்சுலின் மட்டும் தசைவளர்க்க போதாது. கூட பளுதூக்குதல் மற்றும் போதுமான புரதசத்து நிரம்பிய உணவு ஆகிய இரண்டும் அவசியம்.

சிக்கன்களை க்ரோத் ஹார்மோன் கொடுக்து பெரிதாக்கவேண்டுமெனில் அவற்றை ஜிம்மில் சேர்த்து பெஞ்ச்பிரஸ் மற்றும் தண்டால் எடுக்க சொன்னால் அவை அதீத வளர்ச்சியை அடையும். கோழிப்பண்ணைகளில் சிக்கனுக்கு ஜிம் இருக்கா என எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும் 🙂

தமிழகத்தில் விவரம் தெரிந்த எந்த கோழிப்பண்ணை உரிமையாளரும் சிக்கனுக்கு ஸ்டிராய்டு அல்லது க்ரோத் ஹார்மோன் கொடுக்கமாட்டார். கொடுத்தால் அதில் எந்த பலனும் இல்லை. சிக்கனை அதீத வலர்ச்சி அடையவைக்க அவர்கள் கையாளும் உத்தி என்பது அவற்றை கூண்டுகளில் நடக்கமுடியாமல் அடைத்து இஷ்டத்துக்கு மக்காசோளம், சோயா, வைட்டமின் அடங்கிய பெருந்தீனி கொடுப்பதே. இதில் தான் அவை அத்தனை பெரும்வளர்ச்சியை அடைகின்றன.

கேரளாவில் தமிழக பண்ணைகோழிகளில் க்ரோத் கார்மோன் கொடுக்கபடுகிறதா என சந்தேகம் வந்து அரசு சார்பில் சோதனை செய்தார்கள். அதில் எந்த ஆண்டிபயாடிக் மீதமும், ஹார்மோன்கள் இருப்பதும் கண்டுபிடிக்கபடவில்லை. (காண்க படம், முதல் பின்னூட்டத்தில் சுட்டி)

2) சிக்கனுக்கு ஆண்டிபயாடிக் பயன்படுத்துவது

சிக்கனுக்கு நோய்தொற்று வராமல் இருக்க ஆண்டிபயாடிக் பயன்படுத்தபடுகிறது. க்ரோத் புரமோட்டர் எனும் பெயரிலும் ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கபடுகின்றன. அறிவியல் இதுகுறித்து என்ன சொல்கிறது?

1) ஆண்டிபயாடிக் கொடுத்து ஒரு குறிப்பீட்ட காலத்துக்கு பின் சிக்கனை கொன்றால் அதன் இறைச்சியில் ஆன்டிபயாடிக் மீதம் இருக்காது. அதில் எந்த சோதனை நடத்தினாலும் அதில் ஆண்டிபயாடிக் இருப்பதன் சுவடே இருக்காது. அதில் எந்த பின்விளைவும் இருக்காது. அமெரிக்காவில் ஆண்டிபயாடிக் கொடுத்து எத்தனை நாளுக்கு பின் சிக்கனை கொல்லவேண்டும் என தெளிவான விதிகள் உள்ளன. இந்தியாவில் அப்படி எந்த விதியும் இல்லை. ஆனால் இந்திய கோழிப்பண்ணைகள் சுமார் 1000 கோடி அளவுக்கு ஜெர்மனி, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு கோழிகளை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றின் தரகட்டுபாடு நம் நாட்டை விட அதிகம்.

ஆண்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் உள்ள பாக்டிரியாவை சமைத்தால் அதில் உள்ள பாக்ட்ரியா மற்றும் வைரஸ் அந்த வெப்பத்தில் இறந்துவிடும். ஆனால் முந்தைய பதிவில் குறிப்பிட்டதுபோல அந்த இறைச்சியை கவனமாக கையாள்வதும், கையை , பாத்திரங்களை நன்றாக சோப்புபோட்டுகொண்டு கழுவுவதும் அவசியம்.

ஆனால் இறைச்சியில் உள்ள ஆண்டிபயாடிக் மீதங்கள் நம்மை பாதிக்குமா?

முதற்கண் ஆண்டிபயாடிக் மருந்துகளின் மீதல் இறைச்சியில் உள்ளதா என்பதே கேள்விக்குறி. டெல்லியில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. தமிழ்நாட்டில் இல்லை.

உயர்வெப்பத்தில் சமைப்பது இறைச்சியில் உள்ள பல ஆண்டிபயாடிக்குகளின் தீவிரத்தையும், அளவையும் குறைத்துவிடும்., ஆனால் முழுமையாக அகற்றாது

அதனால்:

கோழிப்பண்னைகள் அல்லது அரசு ஆகியவை ஆன்டிபயாடிக் கொடுத்து எத்தனை காலம் கழித்து கோழிகளை கொல்லலாம் என தெளிவாக ஒரு விதியை உருவாக்கி அறிவித்தால் இந்த பிரச்சனை இருக்காது

அப்படி ஒரு விதி வரும்வரை:

உங்களிடம் காசும், வசதியும் இருந்தால் நாட்டுகோழி, ஆர்கானிக் கோழி, ஆண்டிபயாடிக் கொடுக்காத கோழிகளை வாங்கி பயன்படுத்தவும்- லடாக், ஸ்விட்சர்லாந்து உதாரணம் தான்

அது கிடைக்கவில்லை எனில் கோழிக்கடைகளில் வந்து பல நாட்கள் இருந்த கோழிகளை வாங்குங்கள். நாட்பட, நாட்பட ஆண்டிபயாடிக் கோழி உடலால் கிரகிக்கபட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். பொதுவாக ஆண்டிபயாடிக்குகளை கோழிக்கு கொடுத்த 30வது நிமிடம் அது வேலை செய்ய துவங்கிவிடும். 3 அல்லது 4 நாட்களுக்கு பின் அதன் விளைவுகள் சுத்தமாக இருக்காது என பொதுவாக கூறலாம்.

பண்னைகோழி ஈரல், கிட்னி முதலான உள்ளுறுப்புக்களை உண்னவேண்டாம். தசையை மட்டுமே உண்ணவும்

கோழிக்கு ஆண்டிபயாடிக் கொடுத்த அடுத்த நிமிடம் அதைகொன்று, அது உடனடியாக கடைக்கு வந்து, நீங்கள் அதை சாப்பிட்டால் நீண்டநாள்போக்கில் உங்கள் பெருகும்டல் பாக்டிரியாவில் பாதிப்பு வரலாம். இதைதவிர அதில் பின்விளைவு எதுவுமே கிடையாது. ஆனால் லா ஆஃப் ஆவரேஜ் படி இது நடக்கும் சாத்தியகூறு மிக, மிக குறைவே.

அதனால் பண்ணைகோழி இறைச்சியில் பயம் அல்லது பீதிக்கு அவசியம் இல்லை. அதை நன்றாக கையாண்டு நல்ல வெப்பத்தில் சமைத்தாலே போதுமானது. அதில் நோய்தொற்று எதுவும் நம்மை அண்டாது. தினம் கெபிர் தயிரை குடித்து வந்தால் நம் பெரும்குடல் கட் பாக்டிரியா காலனி ஆரோக்கியமாக இருக்கும்.

https://www.facebook.com/100001446818079

Follow us on Social Media