இஞ்சி துளசி ஓமவல்லி ரசம் – மன்சூர் ஹாலாஜ்

எப்பவும் வைக்கிர தக்காளி,எலுமிச்சை ரசம் வைக்கிர மாதிரிதான், ஆனா தாளிக்கும் போது 2 அ 3 இன்ச் இஞ்சியும்
நல்லா நச் நச்னு தட்டி போட்டுக்கனும்.

கூட்டி வச்ச ரசத்த தாளிப்பில கொட்டும் போது நல்லா ஒரு கைப்பிடி துளசி ஓமவல்லி இலைகளை போட்டு கொதிக்க விடனும், அவ்ளோதான் ரசத்த இறக்கி வச்சு எலுமிச்சை சாறு ஊத்தி மூடி வச்சரனும்.

அப்படியே கறித்தண்ணால வசச் ரசம் மாதிரி டேஸ்டா இருக்கும்.

இப்ப பனிக்கு எங்க பாத்தாலும் சளி , காய்ச்சல், இருமல்…..குழந்தைங்க முதல்கொண்டு எல்லாருக்கும் இந்த ரசம் ஏற்றது, ரொம்ப பிடிக்கும்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media