இரும்புச்சத்துப் பொரியல்- ராதிகா ஆனந்தன்

காய்கறிக்கலவையாக 400கி எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட், முள்ளங்கி துருவிக்கொள்ளலாம். முள்ளங்கியை தவிர்ப்பவர்கள் தவிர்க்கலாம்.

வெண்டைக்காய் சிறிது பொடியாக நறுக்கி நெய் அல்லது வெண்ணெய்யில் உப்பு மிளகுத்தூள் போட்டு வறுத்துக்கொள்ளவும்.

இரும்புச்சட்டியில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து துருவியக் காய்கறிகளான பீட்ரூட் முள்ளங்கி போட்டு வதக்கி மூடிப் போட்டு வேகவிடவும் .. பாதி வெந்ததும் கீரை வெங்காயத்தாள் போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். அவசியம் இருக்காது .மிளகாய்த்தூள் உப்பு சீரகப்பொடி போட்டு பிரட்டவும்.. வதக்கிய
வெண்டைக்காயை இப்போ சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

இந்த பொரியலுடன் ஒரு நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால் கூடுதல் பலன்..

குறிப்பு – வெண்டைக்காயில் இருக்கும் ஃபோலிக் ஆசிட்டுடன் கீரை ,
பீட்ரூட், வெங்காயத்தாளில் இருக்கும் இரும்புச்சத்து எலுமிச்சைச்சாறு சேர்க்கும்பொழுது நன்றாக உடலில் சேரும்படி செய்யும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001736941825

Follow us on Social Media