இறால் தேங்காய் பால் கறி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

உரித்த இறால் : 250 கிராம்
தேங்காய்ப் பால் : 3 தேக்கரண்டி
தக்காளி : 2
இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
சீரகத்தூள் : அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கறிவேப்பிலை & கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை :

ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் நறுக்கிய தக்காளி , இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் நன்றாக வதங்கி மசிந்தவுடன் சுத்தம் செய்த இறால்களை போட்டு வதக்கவும் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் . அத்துடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , சீரகத்தூள் & உப்பு சேர்த்து வேக வைக்கவும் .

நன்றாக சுண்டி வரும் போது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கி விடவும் .

கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும் .

இறால் தேங்காய் பால் கறி தயார்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media