இறால் தொக்கு – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தே.பொ:
இறால் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிமசால் பொடி – 1 தே.க.
இஞ்சி பூண்டு விழுது – 1 தே.க.
கொடம்புளி சாறு – 1 மே.க.
தேங்காய் பால் – 1/4 கப்
உப்பு – தே.அ.
தேங்காய் எண்ணெய் – 2 மே.க.
கடுகு – 1/2 தே.க.

செய்முறை:
1. இறாலை சுத்தம் செய்யவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, புளி தவிர மேற்கண்ட எல்லா பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
3. 1 தம்ளர் தண்ணீர் சேர்க்கவும். இறால் 3/4 பதம் வெந்ததும், புளி சாறு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.
4. இறால் வெந்து, தொக்கு கெட்டியானதும் இறக்கி பறிமாறலாம்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media