இறால் வடை – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

எறால் : அரை கிலோ (சுத்தம் செய்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் : ஒரு கப்
சின்ன வெங்காயம் : 10
இஞ்சி : ஒரு தேக்கரண்டி (துருவியது)
பூண்டு : 15 பல்
பச்சை மிளகாய் : 5
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
கொத்தமல்லி இலை : சிறிதளவு
நெய் : தேவைக்கு

செய்முறை :

அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக (வடைக்கு அரைப்பது போல) அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி, அரைத்த விழுதை, வடை போல தட்டி, நெய்யில் போட்டு (Shallow fry), இருபுறமும் வெந்து சிவக்க எடுக்கவும்.
சுவையான எறால் வடை தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media