இலகுவான இறால் – முருகானந்தன்

தேவையான பொருட்கள் –

சுத்தம் செய்யப்பட்ட இறால் 1/2 கிலோ
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
மஞ்சப்பொடி – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
அழகுக்கு – வெட்டிய வெங்காயம் 1
மணத்துக்கு – கருவேப்பிலை – கொஞ்சம்

செய்முறை – மேலே சொன்ன பொருட்களில் இறால் முதல் இஞ்சி பூண்டு வரை விரவி, அரை மணி நேரம் ஊற வைத்து, அடுப்பில் சட்டி ஏற்றி, எண்ணெய் சூடானவுடன் வெங்காயம், கருவேப்பிலை வதக்கி , விரவி வைத்த இறாலை சேர்த்து,
சரியான பதத்தில் இறக்கவும். அதிகம் வேகவிட்டால் இறால் ரப்பர் ஆகிவிடும் ( இறால் ஒளி கசியும் நிலையில் Translucent
இருந்து ஒளி ஊடுருவா நிலைக்கு Opaque வந்தவுடன் இறக்கி விடுங்கள்)
இருவர் பகிர்ந்து உண்ணலாம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1490229097

Follow us on Social Media