ஈரல் குலை தொக்கு – காளிதாசன் சுவாமிநாதன்

ஆட்டு கறிக் கடையில் நுரையீரலோடு கல்லீரல்(liver)மண்ணீரல்(pancreas)மாங்காய்(இதயம்) சேர்த்து குலையாய் தொங்கவிட்டிருப்பார்கள், இது தான் ஈரல் குலை.விலை ரூ.250 இருக்கும்!
இன்று வாங்கும் பொழுது கொசுறாக விதை(கிடாவில் மட்டுமே இருக்கும், மூளையின் சுவையை ஒத்தது)யும் சேர்த்து கிடைத்தது!
நறுக்கி வாங்கி வந்து மஞ்சள் தூள் போட்டு நன்கு அலசி பிழிந்து குக்கரில் போடவும்.ஒரு தக்காளி இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கி அதில் போடவும்.
மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், வீட்டில் தனியா சேர்த்து அரைத்த மிளகாய் தூள், சீரக தூள்,உப்பு இவையெல்லாம் உங்களது ருசிக்கேற்ப போட்டு, ஏலக்காய் 2 பொடித்ததையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடாமல் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் கொஞ்சம் நல்லெண்ணை ஊற்றி(நுரை பொங்கி வராமல் இருப்பதற்காக)
குக்கரை மூடி வெயிட் போடவும்.
முதல் விசில் வந்ததில் இருந்து 20 நிமி கழித்து அடுப்பை அணைக்கவும்!
ஒரு கடாயில் உங்களுக்கு பிடித்த நெய்/எண்ணெய் ஊற்றி சோம்பு கறிமசாலாபட்டை பொடித்தது கறிவேப்பிலை போட்டு தாளித்து குக்கரில் உள்ளவற்றை கடாய்க்கு மாற்றி கிளறவும்!
நீங்கள் விரும்பும் பதத்தில் கிரேவியாகவோ தொக்காகவோ சுக்காவாகவோ செய்து சாப்பிடவும்!
இன்றைய இரவு பேலியோ உணவு இது!
மிகவும் மிருதுவாக சூப்பராக இருக்கும்!
சுவைத்துப் பாருங்கள்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media