ஈரல் பிரட்டல் – ராணி விஜயன்

நேரம் : பதினைந்து  நிமிடங்கள் (சுமாராக)

தேவையான பொருள்கள் :

 1. ஆட்டு ஈரல் – ¼ கிலோ
 2. இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
 3. பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
 4. பச்சை மிளகாய் – 1 (இரண்டாக உடைத்தது)
 5. கறிவேப்பிலை – கொஞ்சம்.
 6. சின்ன வெங்காயம் – 5 0 கிராம்
 7. தக்காளி                        – 1 (பொடியாக நறுக்கியது)

 

மசாலா பொடிகள்

 1. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
 2. மல்லி தூள் – ½ ஸ்பூன்
 3. மட்டன் மசாலா – ½ ஸ்பூன்
 4. ஜீரக தூள் – ½ ஸ்பூன்
 5. மிளகு தூள் – ½ ஸ்பூன்
 6. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
 7. உப்பு – தேவையான அளவு

 

தாளிப்புக்கு

 1. கடுகு – ¼ ஸ்பூன்
 2. வடகம் – ¼ ஸ்பூன்

செய்முறை:

 1. அடுப்பில் குக்கர் பாத்திரம் வைத்து  நல்லெண்ணெய் விடவும்.
 2. தாளிப்புக்கு வைத்த கடுகு , வடகம் போடவும்.
 3. கறிவேப்பிலை போடவும்.
 4. பச்சை மிளகாய் போடவும்.
 5. இஞ்சி பூண்டு விழுது அல்லது வெட்டி வைத்த இஞ்சி, பூண்டு போடவும்.
 6. நன்கு வதக்கவும்.
 7. வதங்கியவுடன், தக்காளி வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
 8. பின்னர், மசாலாவுக்கு கொடுத்துள்ள தூள்களை உப்புடன் சேர்க்கவும்.
 9. நன்கு கலக்கவும்.
 10. இப்போது ஈரல் சேர்க்கவும்.
 11. மசாலா நன்கு ஈரலில் படியுமாறு வதக்கி விடவும்.
 12. கொஞ்சம் வெந்நீர் ஊற்றவும். (தண்ணீர் ஊற்றினால் கெட்டிப் பட்டுவிடும்)
 13. குக்கரை மூடி இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
 14. வெந்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.
 15. தண்ணீர் அதிகம் இருந்தால் இன்னும் இரண்டு விசில் வர விட்டு அணைக்கவும். குழம்பு வேண்டும் என்றால் உடனே இறக்கி விடலாம்.

 

ஈரல் பிரட்டல் தயார்.

சூடாக பரிமாறவும்.

 

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=r1bZdQ-Vczs

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000349157027

Follow us on Social Media