ஈரல் வருவல் – ரத்தினகுமார்

சமையல் குறிப்பு: ரத்தினகுமார்
தேவையானவை
—————-
1. 1/2கி ஆட்டு ஈரல் (கொஞ்சம் கொழுப்பும் சேர்த்து வாங்கி கொள்ளுங்கள்)
2. 2 பெரிய வெங்காயம் / 10சின்ன வெங்காயம்
3. தேவையான அளவு உப்பு, மிளகு, பச்சை மிளகாய்
4. 1 தக்காளி, கொஞ்சம் புதினா (அலங்கரிக்க)

செய்முறை
———–
வெங்காயத்தையும், பச்சை மிளகாயை போட்டு மிதமான வெப்பத்தில் 4நிமிடம் வதக்குங்கள் பின் கொழுப்பை போடுங்கள் 3 நிமிடம் கழித்து சின்ன சின்ன பீஸ்களாக ஈரலை போடுங்கள்(தண்ணீரை இருத்துவிட்டுங்கள்) பின் மிளகுப்பொடி, உப்பு போட்டு கிளறிவிடுங்கள்.. சிம்மில் வைத்து 15-20நிமிடம் வேகவிட்டு, பின் பாத்திரத்தில் எடுத்து பிடித்தமாதிரி தக்காளி, புதினாவை வைத்து சாப்பிடுங்கள்… அருமையான ஈரல் வருவல்… ம்ம்ம்

Follow us on Social Media