ஈஸி முட்டை பன்னீர் பொடிமாஸ் – யசோ குணா

செய்முறை

மதியம் செய்து மீந்து போன பேலியோ காய்கறி பொரியல் , ( இல்லையென்றால் வெங்காயம் சேர்த்துக்கோங்க ) ..

மிக்ஸியில் மூன்று பல் பூண்டு இஞ்சி ஒரு துண்டு ஒரு தக்காளி சேர்த்து அடித்துக்வைத்து கொள்ளவும்

பன்னீரை தேவையான அளவு சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்

14470573_881654558636561_6227766782471318492_n

வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு கறிவேப்பிலை மற்றும் பன்னீரை வறுக்கவும் பாதி நிலையில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டை போட்டு நம்ம வேதாஸ் மசாலா அரை ஸ்பூன் மற்றும் காய் ஒரு கப் சேர்த்து சிம்மில் வைத்து மூடவும் ,

5 நிமிடம் கழித்து பிரட்டி பொன்னிறமானதும் மூன்று முட்டை சேர்த்து கிளறி இறக்கவும் , உப்பு நான் சேர்க்காமலே சரியாயிருந்தது ..தேவையென்றால் நீங்கள் சேர்க்கலாம் ..

இறக்கி பறிமாறும் போது சிறிது பச்சை வெங்காயம் பொடியாக நறுக்கி தூவிக்கொள்ளுங்கள்..

சிங்கிள் மேன் கிச்சனுக்கு இந்த ரெசிபி சமர்ப்பணம்..

பிஸி லேடிஸ்க்கான ஈஸி ரெசிபி..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media