எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு – சிவகாமி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் -1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
தேங்காய் – அரை மூடி (சிறியது)
பூண்டு – 10 பல்
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
புளிக்குழம்பு பொடி – 4 தேக்கரண்டி
புளி தண்ணீர் – 2 கப்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
உப்பு – தேவைக்கேற்ப

பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பாத்திரத்தில் வதக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும்.

இந்த அற்புதமான சமையல் குறிப்பினை வழங்கிய சிவகாமிக்கு நன்றி..

Leave your vote

-3 points
Upvote Downvote

Total votes: 3

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 3

Downvotes percentage: 100.000000%

Follow us on Social Media