எளிய மீன் வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
மீன் 1 கிலோ
மிளகாய்தூள் 2 மேக
மஞ்சள் தூள் 1 தேக
மிளகு 1 மேக
சீரகம் 1 மேக
இஞ்சி 2 இன்ச்
பூண்டு 15 சிறியது
உப்பு தேவையான அளவு
புளி 1 துண்டு(கொடம்புளி)/எலுமிச்சை சாறு 2மேக
கறிவேப்பிலை 2 கைப்பிடி அளவு
செய்முறை#
1.மேலே கொடுத்துள்ள வற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் லேசா தெளித்துக்கொள்ளவும்.
2. அரைத்த கலவையை மீனீல் தடவவும் .
3. தடவி பிரிட்ஞ்ல 2 மணி நேரம் வைக்கவும்
4. மீன் ஊற ஊறத்தான் உப்பு மசாலா நன்றாக ஒட்டும் சுவை கூடும்
5 தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் தடவி மீனை வைக்கவும்,சிறிது கறிவேப்பிலை போடுங்க,வாழைஇலையில் இரு சிறு துண்டுகளை சுற்றி கல்லில் வையுங்கோ(ஒரு மாறுதலுக்கு)
6. ஒரு பக்கம் மீன் வெந்ததும் திருப்பி போட்டு தேங்காய் எண்ணெய் தடவி விடுங்க.. மூடி போட்டு வேக வைத்தால்
சுவையான மீன் வறுவல் ரெடி,இலையில் எடுத்து வைத்து 1/2 மூடி எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media