ஏலப்பி பன்னீர் – உமா மோகன்

பன்னீர் /100 கிராம் ( சதுரமாக வெட்டவும்)
சின்ன வெங்காயம் /10
இஞ்சி / ஒரு துண்டு
பச்சை மிளகாய் / 1
சிகப்பு மிளகாய் / 2
பச்சை குடை மிளகாய் / 1/2 கப் ( சதுரமாக வெட்டவும்)
தேங்காய் எண்ணெய் / 1 மேசைக்கரண்டி, கெட்டி தேங்காய் பால் 1/2 கப்
சோம்பு / சிறிதளவு
கருவேப்பிலை / சிறிதளவு
மல்லி இலை /சிறிதளவு
மஞ்சள் தூள் / சிறிதளவு
உப்பு / தேவையான அளவு
இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு பிறகு மிளகாய் களை சேர்த்து பிறகு இஞ்சி, கருவேப்பிலை, சன்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பன்னீர், உப்பு சேர்த்து வதக்கவும்
தேங்காய் பால் சேர்த்து பிறகு மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும், சிறிது கெட்டியானதும் காரம் அதிகம் தேவை பட்டால் சிறிது சிகப்பு மிளகாய் பொடித்து போடவும். ( Chilli flakes)

சமையல் குறிப்பு:

Follow us on Social Media