கடாய் சிக்கன் – யசோ குணா

அரைக்க தேவையானவை ;

இஞ்சி , பூண்டு , 3 எண்ணிக்கை சிறிய வெங்காயம் , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் இவையனைத்தும் தேவைக்கு , ஒரு குழிகரண்டி வெண்ணெய் மற்றும் யோகர்ட் சேர்த்து அரைத்து கொள்ளவும்

சிக்கனை கழுவிய பின்னர் சிறிது எலுமிச்சை , உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , சோம்பு தூள் , சீரகம் தூள் சேர்த்து பிசறி அரை மணிநேரம் விட்டு பின்னர். அரைத்த கலவையுடன் பிசைந்து 6 லிருந்து 7 மணிநேரம் ஊற வைக்கவும்.

13626593_844566802345337_1580387025126314756_n

குக்கரில் கலவையை மட்டும் சேர்த்து மீடியம் ஹீட்டில் ஒரு விசில் விட்டு எடுக்கவும் .

தாளிதம் செய்ய ; நல்லெண்ணய் அ வெண்ணெய் சேர்த்து. கடுகு , கறிவேப்பிலை , வெங்காயம். தக்காளி ( 30 கிராம் மிகாமல் ) சேர்த்து வதக்கவும் ( கீட்டோவில் இருக்கும் அன்பர்கள் வெங்காயம் & தக்காளி சேர்க்க வேண்டாம் ) பின்னர் சிக்கனை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வறுத்து பின்னர் பரிமாறவும் ..

தட்டில் இருக்கும் சிக்கன் வாய்க்கு போனதும் , சிக்கன் செய்த கைக்கு பரிசு நிச்சயம் .. எனக்கு கிடைத்தது..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media