கடாய் பன்னீர் – சுபா துரைநாயகம்

தேவையான பொருள்கள் :

பனீர் – 300 gms

தக்காளி -5

பச்சை மிளகாய் – 2

குடை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு – 2 tsp

மிளகாய் வற்றல் – 3

தனியா விதை – 2 tsp

கரம் மசாலா – 1½ tsp ஸ்பூன்

வெண்ணை – 30 gms

கஸுர் மேத்தி – சிறிதளவு

கொத்துமல்லி இலை  – சிறிதளவு

14956597_574412969412865_2667150382738380861_n14908405_574413009412861_7254011298643369032_n

 

 

 

 

 

 

 

 

 

செய்முறை:

  1. பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. மிளகாய் வற்றல் மற்றும் தனியா விதையை எண்ணெய் இல்லாமல் வறுத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  4. இரும்பு சட்டியில் 30 கிராம் வெண்ணை உருகி வந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  5. இதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. தக்காளி நன்கு மசிந்ததும் அதனுடன் அரைத்த மிளகாய் வற்றல், தனியா பொடியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  7. அதனுடன் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிட்டு, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. நன்கு வதங்கியதும் பனீர் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் பிரட்டி விடவும்.
  9. இறுதியாக கஸுர் மேத்தியை நன்கு கசக்கி போட்டு பொடியாக நறுக்கிய மல்லி இலையையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

 

Follow us on Social Media