கத்தரிக்காய் கோலா – யசோ குணா

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் 5

சீரகத்தூள் , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , உப்பு , புளி சிறிதளவு , பட்டை பொடித்தது அரை தேக்கரண்டி..

பொடியாக நறுக்கிய வெங்காயம் , இஞ்சி பூண்டு துருவியது 1 தேக்கரண்டி , துருவிய தேங்காய் ஒரு கப், கொத்தமல்லி கறிவேப்பிலை பொடியாக அறிந்தது , ஒரு முட்டை , ஆளிவிதைபொடி 2 தேக்கரண்டி..

செய்முறை :

கத்தரிக்காயுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , உப்பு , புளி சேர்த்து வேக வைக்கவும், வெந்தவுடன் தோலுரித்து மசித்து வைக்கவும் ..

மசித்த கலவையுடன் மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து கொள்ளவும் , கடைசியாக முட்டையை சேர்த்து ( முட்டை தேவையில்லை என்றால் தேங்காய் மாவு சேர்க்கலாம் , ஆளி விதை பொடி அதிகம் வேண்டாம். ) பிசைந்து .. உருண்டைகளாக்கி தேங்காய் எண்ணெய் அ நெய்யில் பொரிக்கவும் ..( மீன் வறுப்பது போல் , 65 மாதிரி அல்ல..)

தயிருடன் பறிமாறலாம் , நான் காரசாரமாய் வெங்காய சட்னி எடுத்துக்கொண்டேன்.

ப்ளேடிங் செய்வதற்குள் , எங்கள் வீட்டு சின்ன குட்டி கொதறி விட்டாள் , மன்னிக்கவும் ..

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media