கத்தரி பூண்டு தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

கத்தரிக்காய் : கால் கிலோ
பூண்டு (உரித்தது) : 20 பல்
தக்காளி : 3
சின்ன வெங்காயம் : 5
சீரகம் : ஒரு தேக்கரண்டி
கடுகு : அரை தேக்கரண்டி
வெந்தயம் : அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
கறிவேப்பிலை : தேவைக்கு
நல்லெண்ணெய் : மூன்று தேக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் & தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேலும் அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக குலைந்து வரும்போது, நான்காக நறுக்கிய கத்தரிக்காய் & உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணையிலேய வேகும் வரை விடவும். பின் சிர்த்து தண்ணீர், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

நன்றாக வெந்து தொக்கு பதம் வரும்போது, மேலும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

சுவையான கத்தரி பூண்டு தொக்கு !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media