கத்திரிக்காய் கடைசல் & வறுவல் – தேன்மொழி அழகேசன்

1 . கத்திரிக்காய் கடைசல்#
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் 300 கிராம்
தக்காளி 2
சீரகம் 1/2 தேக
சின்ன வெங்காயம் 6
பூண்டு 10 பல்
பெருங்காயம் சிறிதளவு
மஞ்சள் தூள் 1 தேக
பச்சமிளகாய் 2
வர மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
தாளிக்க சோம்பு கடுகு கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் பூண்டு நெய்
செய் முறை
குக்கரில் அரிந்த கத்திரிக்காய் தக்காளி சின்ன வெங்காயம் 4 பூண்டு 6 பல் பச்சமிளகாய் சீரகம் அனைத்தையும் ஒன்றாக போட்டு 2 விசில் விட்டு எடுத்து மத்து போட்டு கடைந்து வைத்து கொள்ளவும் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.(மிக்சியில் வேண்டாம்) வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் பூண்டு பெருங்காயம் மிளகாய் வத்தல் போட்டு தாளித்து கொள்ளவும்.சைவ சமையல் செய்யும் போது நெய் விடவும் மணமும் ருசியும் அருமையா இருக்கும்.
2 கத்திரிக்காய் வறுவல்#
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் 200 கிராம்
எலுமிச்சை சாறு சிறிதளவு
மிளகாய்தூள் மஞ்சள் தூள் 1 தேக
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
செய் முறை#
கத்திரிக்காய் 4 ஆக அரிந்து மேலே கொடுத்துள்ள வற்றை போட்டு சிறிது நேரம் வைக்கவும்.
வடச்சட்டி அல்லது தோசைக்கல்லில் நெய் தடவி கத்திரிக்காய் அதில் போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும் சிறிது கறிவேப்பிலை போடுங்க கையில் அழுத்தி பார்த்தாலே தெரியும் காய் வெந்துள்ளதா என்று . பொறுமையா செய்யுங்க .வேகமா வேலை முடியனும்னு நினைப்பவர்கள் அவனில் வைத்து எடுத்து பின் தோசைக்கல்லில் போட்டு எடுக்கலாம்.
கத்திரிக்காய்#
இதில் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல் திறனை அதிகரிக்கின்றன.இது நமது செல்களின் மெம்பரேன்களை பத்திரமாக காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.
வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சக்தியும் நார்ச்சத்தும் உள்ளது.
கத்திரிக்காய் தோலில் உள்ள அன்தோசையனின் என்ற பொருள் நமது சருமத்தை இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.
செய்ய தேவையான நேரம் 20+20

சமையல் குறிப்பு :

Follow us on Social Media