கத்திரிக்காய் முள்ளங்கி சூப் – ஜலீலாகமால்

எந்த டயட் ஆக இருந்தாலும் சூப் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு
டயட்டில் தண்ணீர் தான் 8 டம்ளர் குடிக்கனும் என்றில்லை சூப் ஜுஸ் பால் தயிர் எதுவாக இருப்பினும் சாப்பிடலாம்.

சுலபமான சூப் எப்படி செய்வது என பார்ப்போம்

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – முன்று
முல்லங்கி – ஒரு துண்டு – 100 கிராம்
இஞ்சி துருவியது – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
தண்ணீர் – 4 டம்ளர்

செய்முறை

கத்திரிக்காய் முல்லங்கியை துருவி கொள்ளவும்.
ஒரு பெரிய வயகன்ற சட்டியில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உப்பு,சீரகம், மஞ்சள் தூள், துருவிய கத்திரிக்காய், முல்லங்கி மற்றும் இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
ஒரு டம்ளர் வற்றும் வரை தீயின் தனலை மிதமாக வச்சி வேக விடவும் ( ஸ்லோ குக்கர்).
பிறகு வடிகட்டி தேவைக்கு குடிக்கவும்.
கவனிக்க: இதை பிலன்டரில் லேசா பிளன்ட் செய்து வடிகட்டாமலும் குடிக்கலாம்.
சூப் உடன் கிரில்ட் சிக்கன் மட்டன் அல்லது கிரில் பனீர் வைத்து சாலட் உடன் சாப்பிடலாம்.
சூப் இரண்டு வகை ஒன்று சூப் கு தேவையான காய்களை வேகவைத்ட்து விட்டு அதை பிளன்ட் செய்து அப்படியே மறுபடி கொதிக்க வைத்து குடிப்பது.
மற்றொன்று வேகவைத்து அந்த சூப் சத்துக்களை வடிக்கடி குடிப்பது.
அதில் இது தண்ணீ சாறு சூப் , லிக்விட் டயட் எடுப்பவர்களுக்கு இது உதவும்.
இது போல நான் எல்லா காய்கறிகளிலும் அதாவது டேஸ்ட் இல்லாத காய்களில் செய்து சூப்பாக குடிக்கலாம். பாகற்காயில் கூட இப்படி செய்யலாம் ஆனால் கசப்பு தெரியாமல் இருக்க இதில் பொன்னாகன்னி கீரை மற்றும் கேரட் சேர்த்துகொள்ளலாம்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001476193343

Follow us on Social Media