கத்திரி கறி – வித்யா சவுந்தர்யா

தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் – 5
2 . சுரைக்காய் – 200 கிராம்
3. பரங்கிக்காய் – 200 கிராம்
4. காய் வெட்டான தக்காளி – 1
5. பச்சை மிளகாய் கீறியது – 3
6. கொத்தமல்லி இலை – சிறிது
7. தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்.
8. பசு மஞ்சள் துருவல் – சிறிது
9 .பேலியோ எண்ணெய் – 2ஸ்பூன

செய்முறை:
1. கத்திரிக்காய் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.சுரைக்காய் , பரங்கியை சிறு சதுர துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை நான்கு துண்டுகளாக்கவும்.
2. இட்லி பாத்திரத்தில் கீழ் தட்டில் சுரைக்காய், பரங்கி துண்டுகளை பரப்பவும்.மேல் தட்டில் கத்திரி, தக்காளி துண்டுகளை பரப்பவும். ஐந்து நிமிடங்கள் மட்டுமே வேக விடவும். குழையக் கூடாது.
3. வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் வதக்கவும். பின்னர் வெந்த சுரைக்காய், பரங்கி சேர்த்து 20 நொடிகள் வதக்கவும்.
4. சாம்பார் பொடி, உப்பு , கத்திரிக்காய் , தக்காளி , சேர்த்து 10 நொடி, மிருதுவாக வதக்கவும்.
5. சிறு தீயில் 4 நிமிடம் வைக்கவும்.
6. கறியை தட்டில் இறக்கி, தேங்காய் துருவல் , பசு மஞ்சள் , கொத்தமல்லி தூவி சுவைக்கவும்.

குழைய விட்டால் சுவைு யும், சத்தும் குறையும். மிதமாக வேக வைத்தல் அவசியம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media