கம கம தக்காளி மீன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

மீன் (எந்த மீன் வேண்டுமானாலும்) : அரை கிலோ
தக்காளி : ஐந்து (நன்றாக அரைத்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம் : இரண்டு மட்டும்
இஞ்சி பூண்டு விழுது : இரண்டு தேக்கரண்டி
சீராக தூள் : ஒரு தேக்கரண்டி
வெந்தய தூள் : அரை தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் : இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் : ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு : ஒரு தேக்கரண்டி
உப்பு : தேவைக்கு
கொத்தமல்லி இலை : தேவைக்கு
தேங்காய் எண்ணை : இரண்டு தேக்கரண்டி

செய்முறை :

மீன்களை சுத்தம் செய்து, எலுமிச்சை சாறு , மஞ்சள் தூள் & உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி , சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது & தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து, சீராக தூள், வெந்தய தூள், & காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து ஒரு கொத்தி விடவும்.

அத்துடன் ஊற வைத்த மீன்களை சேர்த்து மூடி வேக விடவும் (உப்பு சரி பார்த்து கொள்ளவும்).

தொக்கு பதத்திற்கு வந்தவுடன், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் .

கம கம தக்காளி மீன் தொக்கு தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media