கருவேப்பிலை குழம்பு – ப்ரியா பாலாஜி

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் 1கப்
பூண்டு 1கப்
கருவேப்பிலை 1கப்
தக்காளி 5
உப்பு, நல்லெண்ணை தேவைகேற்ப
சாம்பார் பொடி 3ஸ்பூன்
கடுகு வெந்தயம் 1ஸ்பூன்
தேங்காய் 1 கப்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலை வதக்கி தனியே வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின்பு மிக்ஸியில் வதக்கிய கறிவேப்பிலை, தேங்காய், 1spoon வதக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி போட்டு நன்கு அரைக்கவும் (paste). பின்பு அரைத்த விழுது, வதக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், 2டம்ளர் தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கெட்டி ஆகும் வரை கொதிக்க விடவும். இறுதியில் நல்எண்ணை ஊற்றி இறக்கவும்.

சாம்பார் பொடி சேய்யும் முறை:
தனியா – 3sp, பெருங்காயப் பொடி -1/2 sp, சீரகம் – 1sp, கடகு, வெந்தயம், மிளகு – 1/4 sp. மிளகாய் – 10-12.

இவை அனைத்தையும் வறுத்து, மஞ்சள் பொடி (1/2 sp) சேர்த்து அரைக்கவும்.

இது காலிபிளவர் ரைஸுடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

சமையல் குறிப்பு: 

Follow us on Social Media