கறிமசாலா தூள் – திருப்பூர் கணேஷ்

பேலியோ – சைவம் & அசைவம்

காய்கறி (சைவம்) சமைப்பதற்கும், கறி (அசைவம்) சமைப்பதற்கும் அதிகமாக பயன்படுவது கறிமசாலா தூள் தான் அதை வீட்டில் எப்படி சுலபமாக தயாரிப்பது என்று பார்ப்போம். நான் கொடுத்துள்ள அளவு மிச்சியில் அரைப்பதர்க்கு சரியாக இருக்கும். கிராம் அளவு பார்பதர்க்கு கிச்சன் ஸ்கேல் இருந்தா பாத்துக்கோங்க இல்லைனா கடையிலயே வெய்ட் போட்டு வாங்கிட்டு வந்துக்கங்க. இதில் பட்டை மற்றும் கிராம்பை கூட அல்லது குறைய உங்கள் விருப்பப்படி சேர்த்துக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. நாட்டு மல்லி – 250 கிராம்
2. வரமிளகாய் – 100 கிராம்
3. சோம்பு – 75 கிராம்
4. சீரகம் – 75 கிராம்
5. மிளகு – 40 கிராம்
6. பட்டை – 5 கிராம்
7. கிராம்பு – 5 கிராம்
8. கசகசா – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
9. மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

செய்முறை

1 முதல் 8 வரை உள்ள பொருட்களை கடாயில் மிதமான அடுப்பில் தனித்தனியாக வறுத்து பின் ஆறவைத்து ட்ரையான மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் 9ஐ சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும். அதன்பின் பெரிய தட்டில் அரைத்த மசாலா தூளை கொட்டி சூடு ஆறியதும் அதை எடுத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது வேணும்ங்கிற அளவு எடுத்து பயன்படுத்திக்கலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media