கறிவேப்பிலை ஈரல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

ஈரல் ( ஆடு அல்லது மாடு) : 250 கிராம்
மிளகு : 2 தேக்கரண்டி
சோம்பு : 1 தேக்கரண்டி
இஞ்சி : 1 இன்ச் அளவு
பூண்டு : 5 பல்
பசு மஞ்சள் : அரை இன்ச்
கறிப்பிலை : 1 கைப்பிடி அளவு
இந்துப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி

செய்முறை :

மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் & கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய ஈரல் துண்டுகளை போட்டு பிரட்டி, அதனுடன் அரைத்த விழுது & உப்பு சேர்த்து பிரட்டி மிதமான தீயில் வேக விடவும். நன்றாக சுண்டி வரும் போது பிரட்டி இறக்கவும்.

சுவையான கறிவேப்பிலை ஈரல் தயார் !

கறிவேப்பிலை வாசத்துடன் ஈரல் சுவை அல்லும்…

சமையல் குறிப்பு :

Follow us on Social Media