கறிவேப்பிலை சிக்கன் கறி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்# சிக்கன் 1/2 கிலோ
1சின்ன வெங்காயம் 10
2பூண்டு சிறியது 10
3இஞ்சி 1 துண்டு
4கறிவேப்பிலை 2 கையளவு
5கரம்மசாலா 1 டேக
6சீரகம் 1டேக
7மிளகு 1 டேக
8சோம்பு 1/2 டேக
9பச்சமிளகாய் 2
உப்பு தேவையான அளவு
தாளிக்க 1 பட்டை,1 கிராம்பு
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
செய் முறை#
மேலே கொடுத்துள்ள 1_9 பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு அரைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
சிக்கனை போட்டு பின் உப்பு கரம்மசாலா போட்டு நன்றாக வதக்கியதும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
எண்ணெய நன்றாக பிரிந்துவரும்வரை வேக வைக்கவும்.சுவையான கறிவேப்பிலை சிக்கன் கறி ரெடி.
#சைவம் காரங்க பன்னீர்,காளான்,காலிபிளவர் இதே மாடலில் செய்யவும்.
கறிவேப்பிலை #
1. முராயா கோயனிகி என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட கறிவேப்பிலை இந்தியா,அந்தமான் பிறப்பிடமாக கொண்டது.
2.இதில் 60%நீர்சத்தும்,6.9%புரதச்சத்தும்,5%தாது உப்புக்களும்,6.3%நார்சத்தும் உள்ளது
3. இதிலுள்ள கோயனிகள் என்ற வேதிப்பொருள்தான் மணம் ஏற்படுவதற்கு காரணம்.தயாமின்,நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின்களும் இதில் உள்ளது.
செய்ய தேவைப்படும்நேரம்# 30 நமிடங்கள்
சர்விங்_1/2 கிலோ 2 பேர் சாப்பிடலாம்.

 

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media