கறிவேப்பிலை சிக்கன் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

சிக்கன் – 1/2 கிலோ
பெ.வெங்காயம் – 1
நல்லெண்ணெய் – 1 தே.அளவு
தக்காளி – 2
இஞ்சி – சி.துண்டு
பூண்டு – 10 பல்.
கறிவேப்பிலை – கைப் பிடி நிறைய.
பட்டை – 4
கிராம்பு – 6
சோம்பு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – தே. அளவு
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்

#செய்முறை::

*பட்டை, கிராம்பு,சோம்பு, தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும்,
*எண்ணெய்யில் பட்டை 2 , கிராம்பு 3, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்ததை சேர்த்து மஞ்சள் தூள்,மி.தூள், மல்லி தூள்,கரம் மசாலா சேர்க்கவும்,
*பின்னர் சிக்கனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

{குறிப்பு : சிக்கனுக்கு பதில் பன்னீரும், காளானும் சேர்த்து இதே முறையில் செய்யலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media