கறிவேப்பிலை பன்னீர் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்:
பன்னீர் 200 கிராம்
கறிவேப்பிலை 3 கைப்பிடி அளவு
(2 கைப்பிடி அரைக்க 1 கைப்பிடி தாளிக்க)
சின்ன வெங்காயம் 7
பூண்டு 10 பல்
இஞ்சி 2 அங்குலம் அளவு
உப்பு தேவையான அளவு
பச்சமிளகாய் 3
எலுமிச்சை சாறு
தாளிக்க வெண்ணெய் சோம்பு


செய் முறை#


மிக்சியில் வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சமிளகாய் கறிவேப்பிலை எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு உருகியதும் சோம்பு கறிவேப்பிலை அரைத்த கலவையை ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் பச்சை வாசம் போகும் வரை சுருள வதக்கி கடைசியாக பன்னீரை போட்டு பன்னீர் உதிர்ந்து விடாமல் மெதுவாக கண் கரண்டி போட்டு திருப்பவும் .. மசாலா பன்னீரீல் சேர்ந்து சுவையோ சுவை.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media