கறி வறுவல் – லீலா

தேவையான பொருட்கள்:

1 மட்டன் 1/2 கிலோ
2 சின்ன வெங்காயம் 15
3 தேங்காய் துருவல் 1/4 கப்
4 மிளகு 1 ஸ்பூன்
5 சீரகம் 1ஸ்பூன்
6 சோம்பு 1ஸ்பூன்
7 பூண்டு 1
8 இஞ்சி சிறு துண்டு
9 மிளகாய் பொடி 1 ஸ்பூன்
10 தனியா பொடி 1 1/2ஸ்பூன்
11 மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
12 கரம் மசாலா 1/4ஸ்பூன்
13 தக்காளி 2
தாளிக்க தேவையானவை

தேங்காய் எண்ணெய். சோம்பு,பட்டை,
கறிவேப்பிலை.

செய்முறை:

3ல் இருந்து 8வரை உள்ள பொருட்களை வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

குக்கரில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்தும் வெங்காயம் போட்டு வதக்கவேண்டும்.

தக்காளி,மட்டன்,அரைத்த விழுது,மிளகாய்,தனியா,கரம் மசாலா,மஞ்சள் பொடிகளை போட்டு கிளற வேண்டும்.

தேவைக்கு ஏற்ப உப்பு , 1/4கப் தண்ணீர் விட்டுமூடி 3 விசில் வரும் வரை சிறு தீயில் வேகவிடவேண்டும்.

இரும்பு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பட்டை ,சோம்பு போட்டு தாளித்து மட்டனை அதில் கொட்டி நீர் வற்றும் வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100012456463298

Follow us on Social Media