காடைவறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
காடை 1 கிலோ(4)
பேலியோ மசாலா 2 மேக
மிளகாய்தூள் 1 மேக
கறிமசாலா 1 தேக
சீரகம் மிளகு தூள் 2 மேக
இஞ்சி விழுது 1 மேக
பூண்டு விழுது 2 மேக
சின்னவெங்காயம் 10
தக்காளி 2
தாளிக்க நெய் கடுகு சோம்பு கறிவேப்பிலை
செய்முறை#
இரும்பு வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை போடுங்க.வெங்காயம் , தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும் ,விழுதுக்கு ஏற்ற உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.நன்றாக வதக்கியதும் காடை,காடைக்கு ஏற்ற உப்புசேர்த்து கொடுத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.(சீரகம் மிளகு தூள் தவிர) நன்றாக பிரட்டவும்,நீர் தேவையில்லை,மிதமான வெப்பத்தில் வைத்து வேக வைத்தால் கமகம காடை வறுவல் ரெடி.கடைசியாக சீரகம் மிளகு தூள் தூவி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
காடை வேக 10_15 நிமிடம்
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media