காடை மிளகு வறுவல் – ராணி விஜயன்

நேரம் : முப்பது   நிமிடங்கள் (சுமாராக)

தேவையான பொருள்கள் :

 1. காடை – 3 (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது)
 2. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
 3. கொத்து மல்லி – கொஞ்சம்
 4. கறிவேப்பிலை – கொஞ்சம்
 5. தக்காளி – 1 (சிறு துண்டுகளாக வெட்டியது)
 6. பெரிய வெங்காயம் – 2 (சிறு துண்டுகளாக வெட்டியது)

மசாலா பொடிகள்

 1. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
 2. கரம் மசாலா – ¼ ஸ்பூன்
 3. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
 4. மல்லி தூள் – 1 ஸ்பூன்
 5. சிக்கன் மசாலா – 1 ஸ்பூன்
 6. மிளகு தூள் – 1 ஸ்பூன்
 7. உப்பு – தேவையான அளவு

 

தாளிப்புக்கு

 1. கிராம்பு – 3
 2. பட்டை – 1 (சிறு துண்டு)
 3. சோம்பு – ¼ ஸ்பூன் (சோம்பு வாசம் பிடித்தால் மட்டும் சேர்க்கவும்)
 4. வடகம் – கொஞ்சம்

 

செய்முறை:

 1. அடுப்பில் மண் அல்லது இரும்பு பாத்திரம் வைத்து  நெய்  விடவும்.
 2. தாளிப்புக்கு வைத்த கிராம்பு, பட்டை, சோம்பு, வடகம் போடவும்.
 3. பொரிந்தவுடன் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
 4. பாதி வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 5. பச்சை வாசம் போனவுடன், தக்காளி சேர்க்கவும்.
 6. சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. பிறகு, மிளகு தவிர்த்து மற்ற அனைத்து மசாலா தூள்களையும் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.
 8. இப்போது, வெட்டி வைத்த காடை துண்டுகளை போடவும்.
 9. மசாலா அனைத்தும் காடை துண்டுகளில் சேருமாறு பிரட்டி விடவும்.
 10. தேவையான அளவு வெந்நீர் சேர்க்கவும். (தண்ணீர் சேர்த்தால் மசாலா ஒட்டாது)
 11. ஒரு தட்டு போட்டு மூடி 15 நிமிடங்கள் வேக விடவும்.
 12. மீதமுள்ள உப்பும், மிளகு தூளையும் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
 13. கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
 14. தண்ணீர் இருந்தால் அது சுண்டும்வரை 5 நிமிடங்கள் வேக விடவும்.
 15. அடுப்பை அணைத்து இறக்கிவிடவும்.

காடை மிளகு வறுவல் தயார்.

சூடாக பரிமாறவும்.

 

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=EC7bo5R-i5g

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000349157027

Follow us on Social Media