காடை முட்டை பிரட்டல் – ராணி விஜயன்

நேரம் : முப்பது நிமிடங்கள் (சுமாராக)

வ.எண் பொருள் அளவு புரதம் கார்ப் கொழுப்பு நார் கலோரி
1 காடை முட்டை 12 14.4 GM 1.0 GM 12 GM 0 GM 148
கோழி முட்டை 3 18.0 GM 2.0 GM 234 GM 0 GM 519
தக்காளி 50 gm 0.5 GM 1.8 GM 0.1 GM 0.4 GM 9
வெங்காயம் 50 gm 0.6 GM 5.5 GM 0 GM 0.3 GM 25
இஞ்சி பூண்டு 1 5
நெய் 1 ஸ்பூன் 85
  இரண்டு பேருக்கு மொத்தம் 33.5 GM 10.3 GM 246 GM 0.7 GM 786
  ஒருவருக்கு மொத்தம் 17 GM 5 GM 123 GM 0.4 GM 398

 

தேவையான பொருள்கள் :

 1. காடை முட்டை –              12
 2. கோழி முட்டை –           3
 3. தக்காளி – 5 0  கிராம்
 4. பெரிய வெங்காயம் – 5 0 கிராம்
 5. இஞ்சி பூண்டு கலவை-   1 SPOON

மசாலாவுக்கு :

 1. கரம் மசாலா – ½ ஸ்பூன்
 2. மிளகாய் பொடி – ½ ஸ்பூன்
 3. மல்லி பொடி – ½ ஸ்பூன்
 4. கறி மசால் – ½ ஸ்பூன்
 5. மஞ்சள் தூள்         – ¼  ஸ்பூன்
 6. மிளகு தூள் – ½ ஸ்பூன்
 7. உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிப்புக்கு:

 1. கடுகு – ¼ ஸ்பூன்
 2. காய்ந்த வெந்தய கீரை – ¼ ஸ்பூன்
 3. வடகம் – கொஞ்சம்.
 4. கறிவேப்பிலை – கொஞ்சம்
 5. கொத்துமல்லி – கொஞ்சம்

 

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=k6oT5GQMnfA

செய்முறை:

 1. முட்டைகளை வேகவைத்து ஓடு பிரித்து எடுத்துக்கொள்ளவும். (காடை முட்டை ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்) தண்ணீரில் போட்டு ஓடு பிரிக்கவும்.
 2. பாதி பாதியாக முட்டைகளை வெட்டிக்கொள்ளவும். கோழி முட்டைகளை நான்காக வெட்டிக்கொள்ளலாம்.
 3. அடுப்பில் இரும்பு சட்டி வைக்கவும்.
 4. ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
 5. தாளிப்பு பொருள்களை போடவும்.
 6. வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
 7. இஞ்சி பூண்டு விழுது போட்டும்.
 8. தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
 9. சிறிது உப்பு போடவும்.
 10. தக்காளி மசித்த பின் மசாலா பொடிகளை போடவும்.
 11. சிறிது தண்ணீர் விடவும். தண்ணீர் கொதித்த உடன் கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
 12. வெட்டி வைத்த காடை, கோழி முட்டைகளை போட்டு மெதுவாக பிரட்டிவிடவும்.
 13. அடுப்பு அணைத்து விடவும்.

காடை முட்டை பிரட்டல்  தயார். சூடாக பரிமாறவும்.

 

 சமையல் குறிப்பு:

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Follow us on Social Media